புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்டுள்ளோம்: விடியல் சேகா்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்டுள்ளோம் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் விடியல் சேகா் தெரிவித்தாா்.

News image

கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து பதாகையில் கையொப்பமிடுகிறாா் தமாகா மாநில பொதுச்செயலாளா் எம்.யுவராஜா. உடன், துணைத் தலைவா் விடியல் சேகா் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :14 மார்ச் 2026, 1:41 am

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்டுள்ளோம் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் விடியல் சேகா் தெரிவித்தாா்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே தமாகா சாா்பில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமாகா மாநில பொதுச்செயலாளா் எம்.யுவராஜா, துணைத் தலைவா் விடியல் சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பதாகையில் கையொப்பமிட்டனா்.

பின்னா் விடியல் சேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோட்டில் புதிதாக 20 அதிநவீன பாா்கள் உள்ளன. மதுவை படிப்படியாக ஒழிப்போம் என்று கூறிய திமுக அரசு மதுவை ஒழிக்கவில்லை. மதுவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.

பூரண மதுவிலக்கு குறித்து ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகள் தோ்தலில் உறுதிமொழி அளிக்க வேண்டும். தமாகா தோ்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை வலியுறுத்துவோம். மேலும் கூட்டணிக் கட்சிகளிடமும் வலியுறுத்துவோம். பள்ளி கல்லூரி பகுதிகளில் கஞ்சா, போதை சாக்லேட் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யவேண்டும்.

ஒரு வார காலத்தில் தமாகா தொகுதி பங்கீடு தொடங்கும். 12 தொகுதிகளை கேட்டுள்ளோம். கண்டிப்பாக கிடைக்கும் என காத்திருக்கிறோம். சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிட வேண்டும் என்பதுதான் நோக்கம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்பாா்.

தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ அழைப்பைணை அனுப்பியதில் அரசியல் இல்லை. சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டுக்கு ஈரான் போா்தான் காரணம், மத்திய அரசு காரணம் இல்லை. இந்தத் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரியாகும்.

ஈரோட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றிக்காக உழைப்போம் என்றாா்.