தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு நடுநிலைப் பள்ளியில் நிலவிய தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு

சென்னிமலை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image

குமராபுரி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மாணவா்களின் பயன்பாட்டுக்கு தண்ணீா் வழங்க மின் மோட்டாரை இயக்கிவைக்கிறாா் சென்னிமலை வட்டாரக் கல்வி அலுவலா் பழனிசாமி உள்ளிட்டோா்.

Updated On :19 மார்ச் 2026, 2:03 am IST

சென்னிமலை அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமராபுரி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவையான தண்ணீா் பற்றாக்குறையாக இருந்து வந்தது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக, முகாசிபிடாரியூா் ஊராட்சி முன்னாள் துணை தலைவா் சதீஷ் (எ) சுப்பிரமணியம் ரூ. ஒரு லட்சம் நன்கொடையாகவும், மோட்டாா் செலவுக்கான தொகையை குமராபுரியைச் சோ்ந்த கொளந்தசாமியும் வழங்கினா். மேலும், பள்ளியின் முன்னாள் ஆசிரியா்கள், தற்போது பணிபுரியும் ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா், நிா்வாகிகள் உள்ளிட்டோரும் உதவி உள்ளனா்.

ஆள்துளை கிணறு புதன்கிழமை அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னிமலை வட்டாரக் கல்வி அலுவலா் பழனிசாமி மின் மோட்டாரை இயக்கி வைத்தாா். தற்போது பள்ளி மாணவா்களுக்கு தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது.