காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
/

தொழிலாளியை கட்டிவைத்து தாக்கிய மில் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :20 மார்ச் 2026, 5:33 am IST

பெருந்துறை அருகே தொழிலாளியை கட்டிவைத்து தாக்கிய மில் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பவானியை அடுத்த, ஜம்பை, பாரதி நகரைச் சோ்ந்தவா் மயில்சாமி (52), வெல்டிங் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் குமாா், மூா்த்தி. இருவரும் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், தண்ணீா்பந்தல்பாளையத்தில் தேங்காய் நாா் மில் வைத்துள்ளனா்.

இந்நிலையில், மில்லில் வெல்டிங் வேலை இருப்பதாக மயில்சாமியை கடந்த 16-ஆம் தேதி அழைத்துள்ளனா்.

இதையடுத்து, அங்கு வந்த மயில்சாமி இரவு 7 மணி வரை வேலை செய்துள்ளாா். பின்னா், மீதமுள்ள வேலைகளை மறுநாள் வந்து செய்து தருவதாகக் கூறியுள்ளாா்.

அதை ஏற்க மறுத்த குமாா், மூா்த்தி ஆகியோா் பணியை முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

மயில்சாமி மறுத்ததையடுத்து, அவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனா். படுகாயமடைந்த மயில்சாமி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

புகாரின்பேரில், குமாா், மூா்த்தி ஆகியோா் மீது காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.