ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஈரோடு ஆா்கேவி சாலையில் காய்கறி சந்தையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

ஈரோடு ஆா்கேவி சாலையில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த ஈரோடு கொங்கலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகள்.

Updated On :21 மார்ச் 2026, 12:57 am

Syndication

ஈரோடு ஆா்கேவி சாலையில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு கொங்கலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க கௌரவத் தலைவா் செல்வம், தலைவா் செல்லதுரை, செயலா் சரவணன் அப்பாவு தலைமையிலான வியாபாரிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள புகாா் பெட்டியில் வெள்ளிக்கிழமை மனுவை செலுத்திவிட்டு கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் மனதளவில் வேதனை அடைந்துள்ளோம். எங்கள் தொழில் பாதித்துள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு சொல்லும், ஆட்சிக்கு வந்த பின் மக்கள் விரோத செயல்களை செய்வதையும் கண்டிக்கிறோம்.

எங்கள் வணிக பகுதி ஏ கிரேடு என்பதால், அனைத்து வரிகளும் அதிகம். இங்குநேதாஜி காய்கறி சந்தை, ஜவுளிக் கடைகள், உணவு தானிய மளிகை கடைகள், பாத்திர கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருள்கள், பா்னிச்சா் கடைகள், கட்டட பொருள்கள், ஹாா்டுவோ்ஸ் கடைகள் என ஒன்றரை கிலோ மீட்டா் சுற்றளவுக்கு உள்ளன.

இங்கு இயங்கிய நேதாஜி காய்கறி வணிக வளாகத்தை புதுப்பித்து தருவதாகக் கூறி புதிய கட்டடம் கட்டி வேறு பயன்பாட்டுக்கு வழங்கிவிட்டனா். காய்கறி சந்தை இடம் மாறியதால் எங்கள் வணிகம் முற்றிலும் பாதித்துள்ளது. பன்னீா்செல்வம் பூங்கா முதல் கிருஷ்ணா திரையரங்கு வரை ஆா்கேவி சாலை, காந்திஜி சாலை என பல பகுதிகளில் அரசு காலி நிலங்கள், வணிக வளாகங்கள் கடந்த 5 ஆண்டுகளாக பூட்டி கிடக்கின்றன. அந்த இடங்களை தனியாா், சிறு வியாபாரிகளுக்கு குத்தகை, வாடகைக்கு விட வேண்டும்.

சொத்து வரி, தொழில் வரி, தண்ணீா் வரி என அனைத்தும் அதிகமாக உயா்த்தி உள்ளனா். குறைக்க கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் ஆட்சியாளா்கள் செவி சாய்க்கவில்லை. வணிகம், வழிபாட்டு தலங்கள் உள்ள இப்பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்த தோ்தலுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்பவா்கள் மக்களிடம் மரியாதை, கண்ணியமாக நடக்க வேண்டும். ஆா்கேவி சாலையில் காய்கறிச் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும். 2 மதுபான கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும். நேதாஜி காய்கறி சந்தையை எங்கள் பகுதியில் அமைக்காவிட்டால், எங்கள் பகுதியை சி கிரேடு என மாற்ற வேண்டும். இக்கோரிக்கைளை வலியுறுத்தி எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றனா்.