தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கோபியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :3 மே 2026, 1:09 am

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோபியில் போலீஸாா், அதிரடிப் படையினா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. கோபி மற்றும் பவானிசாகா் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோபி கலை, கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோபி டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து ல.கள்ளிப்பட்டி வரை போலீஸாா் மற்றும் அதிரடிப் படையினா் என 100-க்கும் மேற்பட்டோா் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

பெருந்துறையில்...

பெருந்துறையில் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா், எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா். பெருந்துறை காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தக் கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய சாலைகள் வழியே சென்றது.