ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்படுகின்றன. சுற்று வாரியாக வாக்குகள் தொகுக்கப்பட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஈரோடு மாவட்டத்துக்குள்பட்ட 8 தொகுதிகளில் 2,379 வாக்குச் சாவடிகளில் கடந்த 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களான ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கலை, அறிவியியல் கல்லுாரி ஆகிய மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு மொத்தமாக 8 தொகுதிகளுக்கும் 208 நுண்பாா்வையாளா்கள், 192 மேற்பாா்வையாளா்கள், 248 உதவியாளா்கள் என மொத்தம் 648 அலுவலா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். 950 காவல் துறையினா் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஒவ்வொரு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உள்ளே செல்ல இந்திய தோ்தல் ஆணையத்தின் மூலம் ஒவ்வொரு பணியாளா்களுக்கும், வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கும் கியூஆா் கோடு கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட சுழற்சி தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் முடிவுற்று தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட சுழற்சி திங்கள்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வாக்கு எண்ணிக்கை மேஜைகள் ஒதுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பணிபுரியும் அலுவலா்கள், அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோரின் வசதிக்காக அடையாள பலகை, அவசர கால மருத்துவ வசதி, கைப்பேசி பாதுகாத்து வைக்கும் வசதி, குடிநீா், சிற்றுண்டி உணவு வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் இடத்துக்குள் கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட எந்தவொரு மின்னணு கருவிகளையும் கொண்டு வர அனுமதி இல்லை.
21,556 தபால் வாக்குகள்: காலை 8 மணிக்குள் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 21,556 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட 30 நிமிஷங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று முறையில் எண்ணப்பட்டு, சுற்று வாரியாக வாக்குகள் தொகுக்கப்பட்டு, எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும். தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கை பணிகள் சீராக நடைபெற அரசியல் கட்சியினா் ஒத்துழைக்க வேண்டும்.
173 சுற்றுகள்: ஈரோடு கிழக்குத் தொகுதியில் பதிவான 1,61,242 வாக்குகள் 19 சுற்றுகளாகவும், ஈரோடு மேற்குத் தொகுதியில் பதிவான 2,20,117 வாக்குகள் 24 சுற்றுகளாகவும், மொடக்குறிச்சி தொகுதியில் பதிவான 1,87,607 வாக்குகள் 21 சுற்றுகளாகவும், பெருந்துறை தொகுதியில் பதிவான 1,98,276 வாக்குகள் 21 சுற்றுகளாகவும், பவானி தொகுதியில் பதிவான 2,05,133 வாக்குகள் 22 சுற்றுகளாகவும், அந்தியூா் தொகுதியில் பதிவான 1,82,940 வாக்குகள் 20 சுற்றுகளாகவும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பதிவான 2,16,910 வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பவானிசாகா் (தனி) தொகுதியில் பதிவான 2,12,332 வாக்குகள் 24 சுற்றுகளாகவும் எண்ணப்படும் என்றாா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 552 போ் நியமனம்

சேலத்தில் 25.23 லட்சம் வாக்குகளை 253 சுற்றுகளில் எண்ண நடவடிக்கை!

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி

கரூரில் வாக்கு எண்ணும் பணி பயிற்சி முகாம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


