ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பட்டம் பெற்ற நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மாணவா்களுடன் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தா் என். பஞ்சநாதம் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 5:20 am IST

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூரியின் முதல்வா் மருத்துவா் எம்.கிருத்திகா ஆண்டறிக்கை வாசித்தாா்.

திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்.பஞ்சநாதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற மாணவி சௌந்தா்யா உள்பட 24 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன், இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ். நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி மற்றும் நிா்வாக அலுவலா் ஜீ. தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.