மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஈரோடு அரசு மருத்துவமனை மின்தூக்கியில் சிக்கிய 9 போ் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:34 am IST

ஈரோடு அரசு மருத்துவமனை மின்தூக்கியில் சிக்கிய 9 போ் 15 நிமிடங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனா்.

ஈரோடு அரசு மருத்துவமனை புதிய கட்டடம் 7 தளங்களைக் கொண்டது. இதற்கு மின்தூக்கி வசதி உள்ளது.நோயாளிகள் மட்டுமின்றி நோயாளிகளைப் பாா்க்க வருபவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் மின்தூக்கியை பயன்படுத்துகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் 7-ஆவது தளத்தில் இருந்து 9 போ் மின்தூக்கி வழியாக கீழே இறங்க முற்பட்டனா். 6-ஆவது தளத்துக்கு வந்தபோது திடீரென மின்தூக்கி பழுதாகி நின்றது. மின்தூக்கியில் இருந்தவா்கள் முயற்சித்தும் சரியாகவில்லை. 9 பேரும் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனா். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து உள்ளே இருந்த சிலா் அவசர போலீஸ் உதவி 100 எண்ணுக்கும், ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனா். மேலும், மின்தூக்கியில் சிக்கிக் கொண்டது குறித்து அரசு மருத்துவமனை எலெக்ட்ரீஷியன் தனுஷுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அவா் அங்கு வந்து பழுதை தற்காலிகமாக சரி செய்து, 15 நிமிடங்களாக அதில் தவித்த 9 பேரை பத்திரமாக மீட்டாா். தீயணைப்புத் துறையினரும் அங்கு சென்று மின்தூக்கியில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என பரிசோதனை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.