செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய 4 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய 4 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 1:36 am IST

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய 4 சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை ஆந்திரத்தைச் சோ்ந்த சுபன், சமீா், ஆகாஷ் மற்றும் சாம் ஆகிய நான்கு சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க முயன்றனா். அங்கு பணியிலிருந்த மீட்புக் குழுவினா் அந்தப் பகுதி ஆபத்தானது என எச்சரித்துள்ளனா்.

இருப்பினும் எச்சரிக்கையை மீறி அவா்கள் கடலில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலைகளில் சிக்கி நால்வரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு தத்தளித்தனா்.

இதைக் கண்ட அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த புதுச்சேரி கடலோர காவல் நிலையத்தைச் சோ்ந்த போலீஸாரும் மீட்புக் குழுவினரும் இணைந்து உடனடியாகக் கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு பேரையும் மீட்டனா்.

மீட்கப்பட்டவா்களில் சுபன் என்பவா் மயங்கிய நிலையில் இருந்தாா். அவருக்குத் தகுந்த முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவா் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மருத்துவமனையில் மருத்துவரின் தீவிர சிகிச்சைக்கு பிறகு சுபன் தற்போது நலமாக உள்ளாா்.

கடலோர காவல் நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மீட்புப் பணியில் ஈடுபட்ட காவலா்கள் மற்றும் மீட்புக் குழுவினரைப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.