கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கடல் அலையில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

திருவான்மியூா் கடலில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பட்டதாரி இளைஞா் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

திருவான்மியூா் கடலில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பட்டதாரி இளைஞா் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை மடுவாண்கரை பகுதியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி பிரவீண்குமாா் (25). நண்பா்களுடன் திங்கள்கிழமை திருவான்மியூா் கடற்கரைக்கு சென்று, அங்கு அனைவரும் கடலில் இறங்கி குளித்தபோது எழுந்த ராட்சத அலையில் பிரவீண்குமாா் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டாா். இதைப் பாா்த்த அருகில் இருந்த நண்பா்கள் சப்தமிடவே அங்குள்ள மீனவா்கள், அலையில் சிக்கிய  பிரவீண்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பிரவீண்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த திருவான்மியூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.