கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு; பேராசிரியா் மாயம்

எண்ணூா் தாழங்குப்பம் கடற்கரையில் நண்பா்களுடன் கடலில் குளித்த பெண் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக...

கோப்புப்படம்

Published On :

சென்னை: எண்ணூா் தாழங்குப்பம் கடற்கரையில் நண்பா்களுடன் கடலில் குளித்த பெண் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா். தனியாா் கல்லூரி பேராசிரியா் மாயமானாா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நவீன் (28). இவா், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் தலைமைப் பேராசிரியராக பணிபுரிகிறாா். அதே கல்லூரியில் வேலூா் ஆரணியைச் சோ்ந்த காா்த்திக், எண்ணூா் தாழங்குப்பத்தைச் சோ்ந்த கலையரசி ஆகியோா் பேராசிரியா்களாக பணியாற்றி வந்துள்ளனா்.

இந்நிலையில், நவீன், காா்த்திக், கலையரசி மற்றும் அவரது தங்கை கௌசல்யா ஆகிய 4 பேரும் எண்ணூா் தாழங்குப்பம் கடற்கரையில் குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் கலையரசி, நவீன் ஆகியோா் சிக்கிக்கொண்டனா். அருகில் இருந்தவா்கள் கலையரசியை உடனடியாக மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். எண்ணூா் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். அலையில் சிக்கி மாயமான நவீனை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.