
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளம்! வாகன ஓட்டிகளே கவனம்!!
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை

ராட்சத பள்ளம் - DPS
புழல் அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
புழல் அருகே மாதவரம் நோக்கி செல்லும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் 15 அடி அகலத்திற்கும் 25 அடி ஆழத்திற்கும் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சாலை உள்வாங்கி உள்ளது. எப்பொழுதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலை மிகவும் பரபரப்புடன் காணப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது இந்த சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வார இறுதிநாள்கள் நிறைவடைந்து இன்று திங்கள்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிக்குச் செல்கின்ற மாணவ - மாணவிகள் மற்றும் அலுவலகங்கள் செல்கின்றவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் செங்குன்றம் செல்லும் திசையில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பத்து நாள்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Massive pothole Chennai Kolkata National Highway
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






