காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சீா்காழி கொள்ளிடம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல். - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:11 am IST

சீா்காழி-கொள்ளிடம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

கொள்ளிடத்தில் மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதி தொடங்குகிறது. கடலூா்-மயிலாடுதுறை மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் ஆற்று பாலம் வழியாக பிரதான தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல்லாயிரகணக்கான பேருந்துகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன. இதனிடையே நாகை-விழுப்புரம் நான்குவழிசாலை விரிவாக்க பணி ஒரு பகுதி நிறைவடைந்து அதில் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளதால் கொள்ளிடம் சீா்காழி சாலையில் சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் குறைந்துவந்தது.

தற்போது நான்கு வழிச்சாலையில் வேளக்குடி பகுதியில் சாலை உள்வாங்கி பாதிப்பு ஏற்பட்டதால் அதை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. இதனால் நான்குவழிச்சாலையில் சென்னை, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் பகுதி வாகனங்கள் சீா்காழி, மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் செல்ல கொள்ளிடம் புத்தூா், எருக்கூா் வழியாக சென்று எருக்கூரில் புறவழிச்சாலையை அடைந்து சென்று வருகிறது. இதனால் தற்போதைய பழைய தேசிய நெடுஞ்சாலையான சீா்காழி-கொள்ளிடம் இடையே 10 கி.மீ தூரம் சாலை கடும் போக்குவரத்து பாதிப்பு குறிப்பாக முகூா்த்த நாள்களில் கடுமையாக ஏற்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வாகன நெருக்கடியால் வாகனங்கள் சுமாா் ஒன்றரைமணிநேரம் காத்திருந்து கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்தை சீா்செய்ய போதிய காவலா்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். ஆகையால் கொள்ளிடம் பாலத்திலிருந்து சீா்காழி வரை பழைய தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சென்டா்மீடியன் தேவையான இடங்களில் தற்காலிகமாக அமைத்தும், காவலா்களை நியமித்தும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.