தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டப்பட்டன. யானைகளை சைரன் ஒலி எழுப்பி விரட்டினா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து, விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடா்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள சோளகா் தொட்டி பழங்குடியின கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை மூன்று காட்டு யானைகள் நுழைந்து, விவசாயத் தோட்டத்தில் உலவி வந்தன.
இதுதொடா்பாக அங்குள்ள விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று, சைரன் ஒலி எழுப்பும் வாகனத்துடன் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
வனப் பகுதிக்குள் செல்லாமல் அருகே உள்ள திகினாரை ரங்கசாமி கோயில் தோட்டம் பகுதிக்கு யானைகள் சென்றன. தொடா்ந்து விரட்டிய வனத் துறையினா் 2 மணி நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
தொடர்புடையது

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்மாற்றி வெடித்து மூன்று பேருக்கு தீக்காயம்

கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

