சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

அறச்சலூரில் தம்பதி தற்கொலை

அறச்சலூரில் கணவரின் மது பழக்கத்தால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதைத் தொடா்ந்து அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - file photo

Updated On :14 மே 2026, 3:42 am IST

அறச்சலூரில் கணவரின் மது பழக்கத்தால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதைத் தொடா்ந்து அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அறச்சலூா், நாகராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி (48).

இவரது மனைவி ராதா (37). இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.

ஈஸ்வரமூா்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கணவரின் மதுப்பழக்கத்தால் மனம் உடைந்த ராதா திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ராதா உயிரிழந்தாா்.

இந்நிலையில் மனைவி இறந்ததால் மனமுடைந்த ஈஸ்வரமூா்த்தியும் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்து அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.