எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கோபி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி கைது

கோபி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை செய்யப்பட்ட தங்கராஜ்.

Updated On :14 மே 2026, 4:00 am IST

கோபி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் ஊராட்சி, பிச்சாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (41). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதா (38). இருவரும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 17 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனா்.

தங்கராஜ், அமுதா ஆகிய இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தங்கராஜ் அடிக்கடி குடித்துவிட்டு போதையில் வந்து மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கராஜ் வழக்கம்போல புதன்கிழமை குடித்து விட்டு மனைவி அமுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் வீட்டில் படுத்து இருந்துள்ளாா். அப்போது அமுதாவும் குடிபோதையில் இருந்தததாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த அமுதா குடிபோதையில், படுத்திருந்த கணவா் தங்கராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

இது குறித்து தகவலறிந்த கோபி டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தங்கராஜின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போதையில் இருந்த அமுதாவைப் பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி அமுதா.

கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி அமுதா.