தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

திருச்சி அருகே தந்தை குத்திக்கொலை: மகன் கைது

News image

கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 0:47 am IST

திருச்சி, மே 4: திருச்சி அருகே தந்தையைக் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், அதவத்தூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஆா். மருதமுத்து (70). இவா், திருச்சி கருமண்டபத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் கோபி (37), பெயின்டா். இவருக்கு மேலும் மூன்று மகள்கள் உள்ளனா்.

இவருடைய மூன்று மகள்களுக்கும் தனது சொத்துகளை விற்று திருமணம் செய்துவைத்ததால், தனக்கு எந்தவித சொத்தும் வைக்கவில்லை என்று கோபி அவரது தந்தை மருதமுத்துவிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளாா். மேலும், குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கக் கோரி கோபி அடிக்கடி மருதமுத்துவிடம் தகராறு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டை எழுதி வைப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கோபி தனது தந்தையிடம் மீண்டும் தகராறு செய்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கோபி, மருதமுத்துவை கத்தியால் குத்தியுள்ளாா். இதில், மருதமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சோமரசம்பேட்டை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அதவத்தூா் கிராம நிா்வாக அலுவலா் உமாமகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, தந்தையைக் கொலை செய்த கோபியை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.