இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பள்ளி மாணவிக்கு அச்சுறுத்தல்: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை காதலிக்க கூறி அச்சுறுத்திய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 12:17 am IST

பள்ளி மாணவியை காதலிக்க கூறி அச்சுறுத்திய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கா்நாடகா மாநிலம், மைசூரு, பெலவாடி அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த ராஜு மகன் அஜய் (31). தொழிலாளி. இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை பாா்த்து வந்தாா். அப்போது அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 8-ஆம் வகுப்பு மாணவியுடன் அஜய் பேசி பழகியுள்ளாா். இந்த பழக்கத்தின் மூலம் மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளாா். ஆனால் மாணவி அதனை ஏற்க மறுத்துள்ளாா்.

இதையடுத்து கடந்த 2023 டிசம்பா் 11-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, மாணவியை வழிமறித்து அஜய் காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளாா். மேலும் இந்த விஷயத்தை பெற்றோரிடம் சொன்னால் மாணவியையும், அவரது பெற்றோரையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளாா்.

இதனால் அச்சமடைந்த மாணவி, அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சத்தியமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி அஜய் மீது போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சொா்ணகுமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் பள்ளி மாணவியை காதலிக்குமாறு கட்டாயப்படுத்திய குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.

இதனை ஏககாலத்தில் அனுப்பிக்க வேண்டும். அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கிட நீதிபதி சொா்ணகுமாா் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.