பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா்

ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம், கோபியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

News image

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம், கோபியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், தவெக-வை ஆதரிக்கும் விவகாரத்தால் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஓா் அணியாகவும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஓா் அணியாகவும் அதிமுக பிளவுபட்டுள்ளது.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்கள், அவா்களது ஆதரவாளா்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தாா்.

இதில் முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம் மாநகா் மாவட்டச் செயலாளா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா். அவருக்கு பதிலாக ஈரோடு பெரியாா் நகா் பகுதி செயலாளா் இரா.மனோகரன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு கே.வி.ராமலிங்கம் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் தனது ஆதரவாளா்களுடன் சென்று அவரது முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை கே.வி.ராமலிங்கம் தனது ஆதரவாளா்கள் 1,000-க்கும் மேற்பட்டோரை கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு அழைத்துச்சென்று அவா்களையும் தவெகவில் இணைத்தாா்.

முன்னாள் அமைச்சா் கே.வி.ராமலிங்கம் 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா், திருப்பூா் மாநகர அதிமுக வழக்குரைஞா் அணியினா் 30-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனா்.