சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சாலை விபத்து: உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு

பவானிசாகரில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:48 am IST

பவானிசாகரில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (47). இவா், சத்தியமங்கலம், கொத்தமங்கலம் சாலையில் தாண்டாம்பாளையம்மேடு என்ற இடத்தில் உணவு விநியோகிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் இப்ராஹிம் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.