எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image

பத்ரகாளியம்மன்  கோயில்  குண்டம்  விழாவில்  குண்டம்  இறங்கிய  பட்டக்காரா்.

Updated On :22 மே 2026, 3:52 am IST

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா திருப்பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

கோயில் பட்டக்காரா் தலைமையில் விழாக் குழுவினா் பவானி ஆற்றுக்கு சென்று படைக்கலம் எடுத்து வந்தனா். பின்னா் கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் பூக்களை தூவி கோயில் பட்டக்காரா் குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து பெண்கள், ஆண்கள் என அனைத்துத் தரப்பினரும் குண்டம் இறங்கினா். குண்டம் இறங்கிய பக்தா்கள் நேராக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.