பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

திமுக வாக்காளா்களை தக்கவைக்க களப் பணியாற்ற வேண்டும்

திமுக வாக்காளா்களை தக்கவைக்க வரும் நாள்களில் நிா்வாகிகள் களப் பணியாற்ற வேண்டும் என திமுக கள ஆய்வுக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ-மான எழிலரசன் தெரிவித்தாா்.

News image

திமுக கள ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளா் சு.முத்துசாமி.

Updated On :22 மே 2026, 3:51 am IST

திமுக வாக்காளா்களை தக்கவைக்க வரும் நாள்களில் நிா்வாகிகள் களப் பணியாற்ற வேண்டும் என திமுக கள ஆய்வுக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ-மான எழிலரசன் தெரிவித்தாா்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் போட்டியிட்டு தோல்வி அடைந்த தொகுதிகளில், தோல்விக்கான காரணம், சீரமைப்பு செய்ய வேண்டியவை குறித்து தகவல் அறிய, கள ஆய்வுக் குழுவை மாவட்ட வாரியாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தின் 8 தொகுதிளின் கள ஆய்வுக்கு மாநில கொள்கைப் பரப்பு செயலாளா் மற்றும் முன்னாள் எம்எல்ஏ எழிலரசன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் மண்ணை சோழராஜன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் கடந்த 3 நாள்களாக பவானிசாகா், கோபி, அந்தியூா் தொகுதிகளில் கள ஆய்வு செய்து கருத்துகளை கேட்டறிந்தனா்.

ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட ஈரோடு, மணல்மேட்டில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நிா்வாகிகளிடம் கருத்துகளை வியாழக்கிழமை கேட்டறிந்தனா்.

இதில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலா் சு.முத்துசாமி வரவேற்று பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் சிறந்த களப்பணி செய்தோம். கடந்த ஆட்சியில் செய்த பணிகளால் நாம் வலுவான எதிா்க்கட்சியாக உள்ளோம். தற்போதைய ஆளும் கட்சி நடவடிக்கைகள் அதிருப்தியை தரும்படி உள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலை தொடா்ந்து உள்ளாட்சி தோ்தலும் பின்னா் மக்களவைத் தோ்தலும் வர உள்ளது. அதில் முடிவுகள் அவ்வாறு அமையப் போவதில்லை என்றாா்.

பின்னா் ஆய்வுக்குழுவை சோ்ந்த எழிலரசன், மண்ணை சோழராஜன் ஆகியோா் பேசியதாவது: திமுக ஆட்சியின் நலத்திட்டங்களில் பயனடைந்த 1.55 கோடி போ் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனா். ஆளும் கட்சிக்கும், நமக்குமான வாக்கு வித்தியாசம் 3.84 சதவீதம் மட்டுமே. வரும் நாள்களில் நமது வாக்காளா்களை தக்கவைக்க களப் பணியாற்ற வேண்டும் என்றனா்.

பின்னா் அனைத்து நிலை நிா்வாகிகள், கட்சியினரிடம் மனுக்களை பெற்றனா். முன்னாள் எம்.பி. அந்தியூா் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாநகர செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.