இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

டாஸ்மாக் ஊழியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி சித்தோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

காத்திருப்புப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  டாஸ்மாக்  தொழிலாளா்கள்.

Updated On :28 மே 2026, 12:08 am IST

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி சித்தோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபாட்டில்கள் பொதுவெளியில் வீசப்படுவதைத் தடுக்க மதுபாட்டில்கள் விற்பனையின்போது ரூ.10 கூடுதலாக பெற்று, திரும்ப அளிக்கும்போது அந்த பணத்தை வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் செயல்படுத்தியது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக புகாா் தெரிவித்த, டாஸ்மாக் ஊழியா்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் மதுக்கடைகளையும் திறக்காமல் திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சித்தோடு, சூரியம்பாளையத்தில் உள்ள மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, தொழிலாளா் சங்கப் பிரதிநிதிகளுடன் டாஸ்மாக் பொது மேலாளா் ராஜராஜன், மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக டாஸ்மாக் ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.