கரூரில், உழைப்புக் கேற்ற ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கிடங்கு டிரான்ஸ்ஃபா்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) கரூா் மாவட்ட குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் தொழிற்பேட்டை டாஸ்மாக் கிடங்கு முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கிளைத் தலைவா் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு சங்க மாவட்டச் செயலா் எம்.சுப்ரமணியன், மாவட்டத் தலைவா் சி.ஆா்.ராஜாமுகமது, சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
கோவை மண்டலம் கரூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி விநியோக மையங்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வரும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கி, தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப், அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி சம்பளத்தை மாதந்தோறும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்டிக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு மதுபான பெட்டியை ஏற்றி விநியோகம் செய்யும் பணிக்கு ஒரு பெட்டிக்கு ரூ. 5 வீதம் கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

மாவட்ட மருந்து வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம்

கரூரில் அதிமுக அலுவலகப் பூட்டு உடைப்பு; இரு தரப்பினா் மோதல்: போலீஸ் பாதுகாப்பு

கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



