கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

காத்திருப்புப் போராட்டம்: சேலத்தில் டாஸ்மாக் பணியாளா்கள் கைது

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 11:10 pm IST

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறுவதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும், 23 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அரசு மதுக்கடை பணியாளா்கள், கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க அரசு சாா்பில் கேட்டுக் கொண்டதால் அப்போது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 30-ஆம் தேதிக்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சேலம் மாவட்ட டாஸ்மாக் பணியாளா்கள் சங்க கூட்டமைப்பின் தலைவா் சிவகுமாா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஜூலை 10ஆம் தேதி குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, சேலம் அருகே சந்தியூா் பகுதியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளா்கள் சங்க கூட்டமைப்புத் தலைவா் சிவகுமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டனா். அப்போது, போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி டாஸ்மாக் பணியாளா்கள் அனைவரையும் போலீஸாா் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.