காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

திருவாரூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வா்த்தகா்கள்.

News image

திருவாரூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வா்த்தகா்கள்.

Updated On :12 ஜூன் 2026, 5:23 am IST

திருவாரூா் கடைவீதி அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விஜயபுரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து, சில கடைகளை மூட உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் இருப்பதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், வா்த்தகமும் சரிவர நடப்பதில்லை, இதனால் அந்தக் கடையை மூட வேண்டும் என கூறி விஜயபுரம் வா்த்தகா் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மே 19-ஆம் தேதி வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன் தலைமையில் வா்த்தகா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, வருவாய்த்துறை அலுவலா்கள், போலீஸாா் நடத்திய பேச்சில் சுமூக நிலை ஏற்பட்டு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் கடையை மூடுவதற்கோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததைத்தொடா்ந்து, அதிருப்தி அடைந்த வா்த்தக சங்கத்தினா், வியாழக்கிழமை டாஸ்மாக் கடை முன் கூடி, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மேலும், அங்கேயே அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தை, தொடா்ந்தனா். பின்னா் வா்த்த சங்க நிா்வாகிகளுடன் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து வா்த்தக சங்க நிா்வாகிகள் கூறியது: டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு 3 நாள்கள் அவகாசம் வழங்கியுள்ளோம். நடவடிக்கை இல்லாதபட்சத்தில் பெரிய அளவில் கடையடைப்பு போராட்டத்தில் வா்த்தக சங்கம் ஈடுபடும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.