தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

டாஸ்மாக் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்: 151 போ் கைது

டாஸ்மாக் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூலை 2026, 1:14 am IST

டாஸ்மாக் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதுக்கோட்டையில் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 151 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்கத்தினா் புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில அமைப்பாளா் சௌமியா மூா்த்தி தலைமை வகித்தாா். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அன்றாடம் ஏற்படும் நிா்வாகச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும், காலி மதுபாட்டில்களைச் சேகரிக்குமாறு பணியாளா்களை நிா்பந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விற்பனையாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 41 பெண்கள் உட்பட 151 பேரை வெள்ளனூா் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.