இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பவானியில் தவெகவினா் அன்னதானம்

பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் தவெக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.

News image

பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் தவெக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.

Updated On :29 மே 2026, 1:32 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பவானியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை தவெக பிரமுகா் எம்.ஜி.நாத் (எ) சி.மாதையன் செய்திருந்தாா். ஈரோடு கிழக்கு மாவட்ட பொறியாளா் அணி ஒருங்கிணைப்பாளா் எம்.பி.பாலகிருஷ்ணன், நகரச் செயலாளா் செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.