இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தவா் கைது

சென்னிமலையில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :29 மே 2026, 1:31 am IST

சென்னிமலையில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னிமலை, வண்டிபேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது ஒரு குடியிருப்பில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த கட்டட தொழிலாளியான ராஜேஷ் டெப்நாத் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.7,500 மதிப்பிலான 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.