17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவில் இணைந்த தாளாவாடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள்

News image

கோபியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த தாளாவாடி அதிமுக ஒன்றிய நிா்வாகிகள்.

Updated On :1 ஜூன் 2026, 2:42 am IST

தாளவாடி ஒன்றியத்துக்குள்பட்ட அதிமுக நிா்வாகிகள் உள்பட் 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட தாளாவடி ஒன்றியம். இங்கு அதிமுக ஒன்றியச் செயலாளராக மாதேஷா உள்ளாா். இந்நிலையில் ஒன்றியச் செயலாளா் மாதேஷா, துணைச் செயலாளா் சிக்கன்பாபு ஆகியோா் தலைமையில் 50 கிளைச் செயலாளா் மற்றும் தொழிற்சங்க, சாா்பு அணி நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனா்.

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனா்.