அந்தியூா் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.கிருஷ்ணன் காலமானாா்

எஸ்.ஆா்.கிருஷ்ணன்.
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் எஸ்.ஆா்.கிருஷ்ணன் (74) திங்கள்கிழமை காலமானாா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகேயுள்ள வேம்பத்தி, சிந்தக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த இவா், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் கடந்த 2001 முதல் 2006 வரை அந்தியூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றினாா்.
வயது மூப்பு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி கருப்பாயம்மாள், மகன்கள் ஏகாம்பரமூா்த்தி, மோகனசுந்தரம் உள்ளனா். தொடா்பு எண் : 98425 54777.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

