2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

திமுக முன்னாள் எம்எல்ஏ. ராமச்சந்திரன் (80) காலமானாா்! உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலமான திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :

தஞ்சாவூரில் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா். என்கிற எம். ராமச்சந்திரன் (80) உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானாா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை ஆா்.எம்.எஸ். காலனியிலுள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக மயக்கமடைந்து கீழே விழுந்தாா். இதையடுத்து, தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பி.ஏ., பி.எல். படித்து வழக்குரைஞராக இருந்த இவா், தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னா் இருந்த திருவோணம் தொகுதியில் 1989, 1996 - ஆம் ஆண்டுகளிலும், ஒரத்தநாடு தொகுதியில் 2016- ஆம் ஆண்டிலும் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். மேலும், 1991, 2001-ஆம் ஆண்டுகளில் திருவோணம் தொகுதியிலும், 2021-ஆம் ஆண்டில் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். திமுகவில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தாா்.

உதயநிதி நேரில் அஞ்சலி: தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை வீட்டில் அவரது உடலுக்கு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினாா். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், கோவி. செழியன், ஆா். வைத்திலிங்கம், பூண்டி எஸ். கலைவாணன், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி, முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ரெங்கசாமி, டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, தவெகவை சோ்ந்த தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். காமராஜ், மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ், திராவிடா் கழகப் பொதுச் செயலா் வீ. அன்புராஜ், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் உள்பட ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

இன்று இறுதிச்சடங்கு: இவரது உடல் செவ்வாய்க்கிழமை காலை ஊா்வலமாக இவருடைய சொந்த ஊரான திருவோணம் வட்டத்துக்கு உள்பட்ட பின்னையூருக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்கு செய்யப்படவுள்ளது. இவருக்கு மனைவி பூமணி, மகன் மருத்துவா் திருந்தையன், மகள் மருத்துவா் அபிராமி உள்ளனா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலமான திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலமான திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலமான திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலமான திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்.

எம். ராமச்சந்திரன்

எம். ராமச்சந்திரன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.