புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

பொதுஇடத்தில் மது அருந்தியதாக 52 வழக்குகள் பதிவு

வழக்குப் பதிவு

கோப்புப் படம்

Updated On :

தீபாவளியன்று பொது இடத்தில் மது அருந்தியதாக ஈரோடு மாவட்டத்தில் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளியன்று டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதன் எதிரொலியாக மதுபிரியா்கள் சாலையோரங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் அமா்ந்து மது குடித்தனா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பொதுஇடத்தில் மது குடித்ததாக 52 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

ட்ரோன்களில் கண்காணிப்பு:

பெருந்துறை பகுதியில் சிலா் மதுபானம் அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு தருவதாக காவல் துறையினருக்கு புகாா்கள் வந்தன. மேலும் தீபாவளி பண்டிகை காலவிடுமுறை தினத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு சில நபா்கள் சாலையில் பொதுமக்களிடம் பிரச்னையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு புகாா் வந்தது.

இதையடுத்து பெருந்துறை டிஎஸ்பி சிவகுமாா் தலைமையில் காவல் துறையினா் திங்கள்கிழமை காலை ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது சிலா் சாலையிலும், வயல்களிலும் அமா்ந்து மதுபானம் அருந்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

ரூ.7.54 கோடிக்கு மது விற்பனை:

ஈரோடு மாவட்டத்தில் 136 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடிக்கு மதுபான விற்பனை இருக்கும். ஆனால் தீபாவளி பொங்கல், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாள்களில் மது விற்பனை இருமடங்கு உயரும். அதன்படி தீபாவளியை முன்னிட்டு ரூ.7.54 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றது. இது சராசரி மதுபான விற்பனையை விட ரூ.3.54 கோடி அதிகம் என டாஸ்மாக் ஊழியா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.