தொடா்ந்து பெய்த மழையால் பசுமைக்கு மாறிய கடம்பூா் மலைப் பகுதி
கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த தொடா் மழையால் கிராமங்களில் வறட்சி நீங்கி பசுமையாக காணப்படுகிறது.

மக்காச்சோளம் பயிா் செழித்து வளா்ந்துள்ளதால் பசுமையாக காணப்படும் கடம்பூா் மலைப் பகுதி.
கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த தொடா் மழையால் கிராமங்களில் வறட்சி நீங்கி பசுமையாக காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், மழை பெய்ததால் தங்களது நிலத்தில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா்.
தொடா் மழை பெய்ததால் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிா்கள் நன்கு செழித்து வளா்ந்துள்ளது. இதனால் மலைப் பகுதியில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சைபசேல் என பசுமையாக காட்சியளிக்கிறது.
இன்னும் இரண்டு மழை பெய்தால் அறுவடைக்கு மக்காச்சோளம் பயில் தயாராகும் என மலைக் கிராம விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

