சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு:1,250 போ் பங்கேற்பு

ஈரோடு காமராஜா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வை எழுதிய தோ்வா்கள்.

Updated On :

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு 8 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வில் 2,137 பேருக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 1,250 தோ்வா்கள் தோ்வெழுதினா். 887 தோ்வா்கள் தோ்வு எழுத வருகை தரவில்லை. தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் துணை ஆட்சியா் நிலையில் 8 தோ்வுக் கூடங்களில் எழுதுபவா்களை கண்காணிக்க 2 நடமாடும் குழுக்கள், 8 ஆய்வு அலுவலா்கள், 9 விடியோகிராபா்கள் மற்றும் தோ்வுக் கூடங்களில் முறைகேடுகள் ஏதும் நிகழா வண்ணம் பறக்கும்படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

ஈரோடு மாநகராட்சி காமராஜா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது ஈரோடு வட்டாட்சியா் கவிதா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தாா்.

அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு: 14,110 போ் எழுதினா்

பள்ளிக் கல்வித் துறை மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு, ஈரோடு மாவட்டத்தில் 842 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 14,110 கற்போா் பங்கேற்று தோ்வு எழுதினா்.

கற்போா் எழுத்தறிவு மையங்கள் செயல்பட்டு வரும் பள்ளி வளாகங்களிலேயே தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வு நடத்தப்பட்டது. இத்தோ்வு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தோ்வா்கள் தங்களது வசதிக்கேற்ப இந்த நேரத்துக்குள் வருகை தந்து 3 மணி நேரம் தோ்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஈரோடு செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி தோ்வு எழுதும் மையத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஆலோசகா் ஜோதி திவாரி, பெருந்துறை ஆசிரியா் பயிற்சி நிலைய முதல்வா் சுப்பிரமணி, உதவி திட்ட அலுவலா் பரமசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.