90 மையங்களில் குரூப் 2 தோ்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 2 தோ்வு மதுரை மாவட்டத்தில் மொத்தம் 90 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) நடைபெறுகிறது.

கோப்புப்படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 2 தோ்வு மதுரை மாவட்டத்தில் மொத்தம் 90 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்க மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 26,658 போ் விண்ணப்பித்தனா்.
இதையொட்டி, மதுரை கிழக்கு, மேற்கு வட்டங்களில் தலா 8 தோ்வு மையங்கள், வடக்கு வட்டத்தில் 30 மையங்கள், தெற்கு வட்டத்தில் 29 மையங்கள், மேலூா் வட்டத்தில் 6 மையங்கள், உசிலம்பட்டியில் 9 மையங்கள் என 90 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது.
தோ்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீா், கழிப்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தோ்வா்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

