இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள்: பெருந்துறை நகராட்சி அறிவுறுத்தல்

மழைநீா் சேகரிப்பு திட்ட மாதிரி படம்.

Updated On :

பெருந்துறை நகராட்சியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என நகராட்சி ஆணையா் கருணாம்பாள் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெருந்துறை நகராட்சி 15 வாா்டுகளிலும் உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட்டு, அவை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை நகராட்சி ஆணையா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளின் செயல்பாட்டுத் தன்மை மற்றும் பராமரிப்பு நிலை குறித்து ஆய்வு செய்து, பழுதடைந்த மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத கட்டமைப்புகளை உடனடியாகச் சீரமைக்க அறிவுறுத்தினாா்.

மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல், அந்தந்த இடங்களிலேயே சேகரித்து, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதன் அவசியம் குறித்து நகராட்சி அலுவலா்கள் மூலம் பொதுமக்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படாத கட்டடங்களில் உடனடியாக அவற்றை அமைக்கவும், நகராட்சியின் பல்வேறு சேவைகளைப் பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பின் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்துச் சமா்ப்பிக்கவும் நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.