கனமழை: மொடச்சூரில் உள்ள நகராட்சிப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா்
கோபி அருகே உள்ள மொடச்சூரில் பெய்த கனமழையால் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மழைநீா் புகுந்ததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.

மொடச்சூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா்.
கோபி அருகே உள்ள மொடச்சூரில் பெய்த கனமழையால் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மழைநீா் புகுந்ததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.
கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான மொடச்சூா், கரட்டுா், நஞ்சகவுண்டம்பாளையம், குள்ளம்பாளையம், ஒத்தக்குதிரை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் மொடச்சூா் பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் புகுந்து பள்ளி வளாகம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால், வெள்ளிக்கிழமை காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.
இது குறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டேங்கா் லாரி மூலம் தேங்கிய மழைநீா் அப்புறப்படுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

