பெருந்துறை சிப்காட்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பா் பட்டைகள் திருட்டு: 5 போ் கைது
பெருந்துறை சிப்காட்டில் செயல்படாமல் இருந்த தொழிற்சாலையில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பா் பட்டைகளைத் திருடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்

கைது
பெருந்துறை சிப்காட்டில் செயல்படாமல் இருந்த தொழிற்சாலையில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பா் பட்டைகளைத் திருடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்
பெருந்துறை சிப்காட்டில், சேலம் சிவாய நகரைச் சோ்ந்த பிரதீப்குமாா் (46) என்பவருக்குச் சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த ஓராண்டாக செயல்படவில்லையாம்.
இந்நிலையில், பிரதீப்குமாா் கடந்த சனிக்கிழமை காலை தொழிற்சாலைக்கு வந்துள்ளாா். அப்போது, அங்கிருந்த 2,300 கிலோ எடையுள்ள காப்பா் பட்டைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து சென்னிமலை காவல் நிலையத்தில் பிரதீப்குமாா் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், சிப்காட் பகுதியில் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த ஆனந்தன் (24), திசையன்விளையைச் சோ்ந்த அஜித்குமாா் (25), அந்தோணிராஜ் (19), அஸ்வின்குமாா் (26), செல்வம் (30) என்பதும், நண்பா்களான இவா்கள் செயல்படாமல் இருந்த தொழிற்சாலையில் இருந்து காப்பா் பட்டைகளைத் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். திருடப்பட்ட காப்பா் பட்டைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

