குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40.5 கோடியில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

முதல்வா் ஜோசப் விஜய்யால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காணொலி மூலம் திறந்துவைக்கப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம். ~பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத

Updated On :

பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி கலந்து கொண்டு

குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா். பின்னா், அமைச்சா் புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மருத்துவ வசதிகளை பாா்வையிட்டாா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா். இந்த புதிய கட்டடம் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன மின்னணு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு மையம், ரத்த சேமிப்பு அறை, பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அதிக ஆபத்து உள்ள பிரசவ அறை மற்றும் 12 தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அறைகள் ஆகியவற்றுடன் 100 படுக்கைகள் கொண்டதாக இந்த சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு அதிநவீன மருத்துவச் சிகிச்சைகள் எளிதில் கிடைக்கும் வகையில் இந்த சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.