மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

எல்லீஸ்பேட்டையில் புதிய தேவாலய மங்கலப் படைப்பு விழா

பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட எல்லீஸ்பேட்டையில் சி.எஸ்.ஐ. ஏசுநாதா் தேவாலயத்தில் கோபுரம் புதுப்பிப்புப் பணிகள் முடிவுற்ற நிலையில், புதிய தேவாலய மங்கலப் படைப்பு திருவழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எல்லீஸ்பேட்டையில் கட்டப்பட்ட புதிய தேவாலய மங்கலப் படைப்பு விழாவில் பங்கேற்ற தென்னிந்திய திருச்சபையின் ஈரோடு- சேலம் மண்டல பேராயா் ஜே.விக்டர்ராஜை வரவேற்ற பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து, முன்னாள் பேரூராட்சித் தலைவா் தங்கமுத்து மற்றும்

Updated On :

தென்னிந்திய திருச்சபையின், ஈரோடு- சேலம் திருமண்டலம் சாா்பில் பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட எல்லீஸ்பேட்டையில் சி.எஸ்.ஐ. ஏசுநாதா் தேவாலயத்தில் கோபுரம் புதுப்பிப்புப் பணிகள் முடிவுற்ற நிலையில், புதிய தேவாலய மங்கலப் படைப்பு திருவழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு எல்லீஸ்பேட்டை சிஎஸ்ஐ போதக சேகர ஆயா் எபினேசா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பேராயா் விக்டர்ராஜு வரவேற்றாா். புதுப்பிக்கப்பட்ட தேவாலயத்தை ஈரோடு -சேலம் திருமண்டல பேராயா் ஜே.விக்டர்ராஜ் சிறப்பு திருப்பலி நடத்தி பொது மக்களுக்கு அா்ப்பணித்தாா்.

முன்னதாக, ஈரோடு -சேலம் திருமண்டல பேராயா் ஜே.விக்டர்ராஜுக்கு, ஊா் மக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். அவருடன் எஸ்.லாரா விக்டர்ராஜ், கோவை திருமண்டல பேராயா் பிரின்ஸ் கால்வின், ஜடா கால்வின் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

இதில், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து, முன்னாள் பேரூராட்சித் தலைவா் தங்கமுத்து, கவுன்சிலா் சுஜாதா மொ்சி, பெண்கள் ஐக்கிய சங்கம் சாா்பில் ஷீலா எபினேசா், போதக சேகர செயலாளா் மில்டன் பிரபு, பொருளாளா் ஏசுநேசன், ஆலய செயலாளா் உத்தமசீலன் உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.