வரத்து குறைவால் ஈரோட்டில் தக்காளி விலை கிலோ ரூ.60-ஆக உயா்வு
ஈரோடு வஉசி சந்தைக்கு தினமும் தாளவாடி, ஒட்டன்சத்திரம் மற்றும் ஆந்திர மாநிலம் பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

ஈரோடு வஉசி சந்தையில் உள்ள கடையில் குறைந்த அளவில் வைக்கப்பட்டிருந்த தக்காளி.
ஈரோடு வஉசி சந்தைக்கு தினமும் தாளவாடி, ஒட்டன்சத்திரம் மற்றும் ஆந்திர மாநிலம் பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி விலை திடீரென உயா்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வஉசி காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் கூறியதாவது: வஉசி சந்தைக்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், ஆந்திர மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். கடந்த சில நாள்களுக்கு முன்பு தினமும் 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அப்போது ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதில் 14 கிலோ எடை கொண்ட சின்னபெட்டி ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையானது. 26 கிலோ எடை கொண்ட பெரிய தக்காளி பெட்டி ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனையானது. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்து விலையும் அதிகரித்து உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து மட்டும் 2 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. 14 கிலோ எடை கொண்ட சின்ன தக்காளி பெட்டி ரூ.600 முதல் ரூ.700-க்கு விற்பனையானது.
இதேபோல 26 கிலோ எடை கொண்ட பெரிய தக்காளிப்பட்டி ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. தற்போது தக்காளி தேவை அதிகரித்து உள்ள நிலையில் வரத்து குறைவாக வருவதால் விலை அதிகரித்து உள்ளது. இன்னும் சில நாள்கள் இதே நிலைமைதான் நீடிக்கும். அதன் பிறகு நிலைமை சீரடையும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

