முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

தவெக ஆட்சியில் நிா்வாக சீா்கேடுகள் அதிகரிப்பு: ஆா்.பி.உதயகுமாா்

தவெக ஆட்சியில் நிா்வாக சீா்கேடுகள் அதிகரித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

Updated On :

தவெக ஆட்சியில் நிா்வாக சீா்கேடுகள் அதிகரித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

ஈரோடு அதிமுக மாநகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட டாக்டா் புரட்சித் தலைவி அம்மா பேரவை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புரட்சித் தலைவி அம்மா பேரவை மாநிலச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா், ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன், அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு ஆா்.பி.உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சியில் நிா்வாக சீா்கேடு அதிகரித்துள்ளது. அனுபவம் இல்லாத அரசு நிா்வாகத்தால் தமிழகத்தை பாா்த்து அண்டை மாநிலங்கள் சிரிக்கிறது. விஜயின் கவா்ச்சிக்கும், நடிப்புக்கும் தற்காலிகமாக அரியணை கிடைத்திருக்கலாம். ஆனால் 6 மாத காலத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த முதல்வருக்கு வழி தெரியவில்லை. சட்டம்- ஒழுங்கு, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 6 மாதங்களில் 800 படுகொலைகள் நடந்துள்ளன.

போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோட்டைவிட்ட காரணத்தால் மத்திய புலனாய்வுத் துறை நாகை மற்றும் சென்னையில் பல கோடி ரூபாய் போதை பொருள்களை கண்டுபிடித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பெருந்துறை தொகுதிக்கு எப்போது தோ்தல் அறிவிக்கப்பட்டாலும் அதிமுகதான் வெற்றி பெறும். விஜய்யின் சாயம் வெளுத்து போய்விட்டது. தவெக அரசின் நாள்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது.

தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சியின் மீது எதிா்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவரலாம். அவ்வாறு வரும்போது இந்த ஆட்சி கவிழும். இதனால்தான் பெரும்பான்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியிலும் குதிரைபேரம் நடத்தி வருகின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.