சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

தமிழகத்தின் ஒப்புதலின்றி காவேரியில் ஒரு பக்கெட் தண்ணீரை கூட நிறுத்த முடியாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறு ஓடுகிறதோ அங்கெல்லாம் பிரச்னை தான் என துரைமுருகன் கூறியிருப்பது குறித்து...

திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் - டிஎன்எஸ்

Updated On :

தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி காவேரியில் ஒரு பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த முடியாது என திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார். மேலும், கர்நாடக முதல்வர் ஆர்வத்தின் காரணமாக இதுபோன்று சொல்கிறாரே தவிர, இதனை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் துரைமுருகன் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, கர்நாடகா முதல்வர் சிவக்குமார் அமைச்சரானதில் இருந்தே மேக்கேதாட்டு அணையை பற்றியே பேசி வருகிறார். நாங்கள் கட்டுவோம் என சொல்வதே முடியாத காரியம். இரு மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளில் எந்த காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு மாநிலமும் தன்னிச்சையாக அணையை கட்டுவது, நீரை தேக்கி வைப்பது என்பது முடியாத காரியம்.

பிரச்னை தான்

எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறு ஓடுகிறதோ அங்கெல்லாம் பிரச்னை தான். முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, காவேரி உள்ளிட்ட ஆறுகளிலும் பிரச்னை இருக்கிறது. அதனால் தான் முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துவது, கூடுதல் அணை கட்டுவது கேரளாவால் முடிவெடுக்க முடியாது. அது நம்மை சார்ந்த ஒரு பிரச்சனை. அதே போன்று தான் காவிரியும்.

அபத்தம்

காவிரியில் நாங்கள் அணை கட்டுவோம் என்பதே அபத்தம். அதற்கு வாய்ப்பிருந்தால் இந்நேரம் கட்டியிருப்பார்கள் ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு பக்கெட் தண்ணீரை கூட நிறுத்த முடியாது

தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி ஒரு பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த முடியாது. எப்படியாவது ஒப்புதல் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது நம்மிடம் கிடையாது. சட்டப்படியாக நீதிமன்ற உத்தரவும் இல்லை.

தடைக்கல்களைத் தாண்டுவது சுலபம் அல்ல

நீதிபதி சொல்லிவிட்டால் கூட அணையை கட்ட முடியாது. அதற்கான ஆயத்தங்களை எடுக்க வேண்டும். முதலில் மத்திய நீர்வள ஆணையத்திற்கு செல்ல வேண்டும், வனத்துறை, சுற்றுச்சூழல் அனுமதி என இவ்வளவு பிரச்னைகளை தாண்டி வர வேண்டும். ஏற்கனவே ஒரு முறை நம்மை கேட்காமல் மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக கூறி வனத்துறைக்கு அனுப்பினார்கள். அப்போது அனுமதி கொடுக்க முடியாது என அனுப்பி விட்டார்கள். தடைக்கல்களைத் தாண்டுவது என்பது சுலபம் அல்ல.

ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ளக் கூடாது

கர்நாடக முதல்வர் சிவக்குமார ஆர்வத்தின் காரணமாக சொல்கிறாரே தவிர, இதனை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதுவரை நீதிமன்றம் போட்ட உத்தரவை கர்நாடகா மதித்துள்ளதா?, இதுவரை கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டுள்ளதா..?

ஆளுநரே பதிலளிப்பார்

சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, ஆளுநரிடம் தானே கேட்டார்கள், என்னிடம் இல்லையே?. அதற்கு அவரே பதிலளிப்பார் என துரைமுருகன் கூறினார்.

Not even a single bucket of water from the Cauvery can be withheld without Tamil Nadu's consent: Former Minister Duraimurugan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER