மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் முடித்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள், வெளிநாடுகளில் உள்ள எளிமையான சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி விவாகரத்து பெற முடியாது என்றும், வெளிநாட்டில் விவாகரத்து பெற்றாலும் இந்திய சட்டப்படி அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக ஆகாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில், விவாகரத்து வழங்க நீதிமன்றங்கள் ஏற்கும் காரணங்களை இந்திய சட்டங்கள் அங்கீகரிப்பதில்லை, எனவே, வெளிநாடுகளில் விவகாரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், இந்திய சட்டப்படி, முதல் திருமணம் ரத்து செய்யப்படாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்றமாகவே கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

வெளிநாடு செல்லும் நபர்கள், தங்களது மனைவியின் ஒப்புதல் இன்றில் பல்வேறு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த நாட்டின் குடிமகனாக மாறினாலும்கூட, இந்திய சட்டப்படி அவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

உச்ச நீதிமன்றம் இது குறித்துப் பிறப்பித்த உத்தரவில், திருமண விவகாரத்தில், இந்திய சட்டத்தின்படி எதிர்கொள்ள வேண்டிய பின்விளைவுகளை, வாழ்க்கைத் துணையின் குடியுரிமை மாறிவிட்டால் மட்டும், தப்பித்துவிட முடியும் என்று நினைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

வெளிநாட்டு நீதிமன்றத்தில், மனைவியின் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து பெற்று, மறுமணம் செய்துகொண்ட நபர் மீது இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய திருமணச் சட்டப்படி மணம் முடித்தவர்களுக்கு, வெளிநாட்டு நீதிமன்றங்கள் அளிக்கும் விவாகரத்து, இந்தியாவில் செல்லுபடியாகாது என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

Summary

Those married in India cannot obtain a divorce abroad! Supreme Court ruling

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.