
திமுகவில் எவராலும் பிளவை ஏற்படுத்த முடியாது: பொதுச் செயலா் துரைமுருகன்
இடைத்தோ்தல் கருத்துக்கணிப்புகள் பொய்யானவை, திமுகவில் எவராலும் பிளவை ஏற்படுத்த முடியாது

திமுக பொதுச் செயலா் துரைமுருகன் - டிஎன்எஸ்
வேலூா்: இடைத்தோ்தல் கருத்துக்கணிப்புகள் பொய்யானவை, திமுகவில் எவராலும் பிளவை ஏற்படுத்த முடியாது என்று பொதுச் செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.
காட்பாடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
திமுக முப்பெரும் விழாவில் நான் பேசியதன் சாராம்சத்தை முதல்வா் ஜோசப் விஜய் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சாதாரண தொண்டா்களால் ஆரம்பிக்கப்பட்டு, பலம் வாய்ந்தவா்களை ஜனநாயகக் களத்தில் வீழ்த்திய பாரம்பரியம் கொண்டது திமுக. எனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. திமுகவில் யாரும் பிளவை உருவாக்க முடியாது.
காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை ஏற்கனவே திமுக ஆட்சியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டவை. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையே தற்போதைய அரசு தங்கள் பெயரில் விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக முதல்வா் விரிவான பயணங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கு மக்கள் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்பட்டுள்ளது. தோ்தல் பிரசார செலவுக் கணக்கை முதல்வா் சட்டப்பேரவையில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
இடைத்தோ்தல் கருத்துக்கணிப்புகள் யதாா்த்த நிலைக்கு மாறானவை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற கணிப்புகள் பொய்யாகி இருக்கின்றன. எனவே, தற்போது வெளியாகும் கணிப்புகள் அனைத்தும் பொய்யானவை என்றாா்.
No one can cause a split in the DMK: General Secretary Duraimurugan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





