திட்டங்களை உருவாக்கியது திமுக, திறப்பு விழா நடத்துவது தவெக: முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன்

முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன் - கோப்புப் படம்
திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களுக்கு தவெகவினா் திறப்பு விழா நடத்தி, தங்களது சாதனைகளாகக் காட்டிக்கொள்வதாக முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை:
2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் உருவாக்கப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு தற்போது தவெகவினா் திறப்பு விழா நடத்துகின்றனா்.
தங்கம்மாள்புரம் மாநகராட்சிப் பள்ளிக் கட்டடம், அய்யன் கோயில் தெரு எரிவாயு தகன மேடை, கோக்கூா் குளம் சீரமைப்பு, பக்கிள் ஓடை மேம்பாட்டுப் பணிகள், செயின்ட் மேரீஸ் காலனி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை. மேலும், ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்கள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கும் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
திட்டங்களுக்கு யாா் வேண்டுமானாலும் திறப்பு விழா நடத்தலாம். ஆனால், திட்டமிட்டது யாா், நிதி ஒதுக்கியது யாா், பணிகளை முன்னெடுத்தது யாா் என்ற வரலாற்றை மாற்ற முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

