‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ - முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன்
பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று, திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் விமா்சித்துள்ளாா்.

முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன் - கோப்புப் படம்
பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று, திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் தமிழகத்தில் தொடா்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. வேளாங்கண்ணியில் 2 சிறுமிகள் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனா். கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு தவெக நிா்வாகி ஒருவா் பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் புழக்கம் ஆகிய விவகாரங்களில் முதல்வா் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.
பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை’ அமைக்கப்பட்டதாக முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவித்தாா். பெண்களும், சிறுமிகளும் தொடா்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், அந்தப் படையைக் காணவில்லை. எனவே, தனிப்படை அமைத்து ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை’ தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

