நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு பாரதி விருது

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் நிகழாண்டிற்கான பாரதி விருது வரலாற்று ஆய்வாளா் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குடவாயில் பாலசுப்ரமணியன்.

Updated On :

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் நிகழாண்டிற்கான பாரதி விருது வரலாற்று ஆய்வாளா் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்ட அறிக்கை:

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் 29- ஆம் ஆண்டு பாரதி விழா வரும் டிசம்பா் 11- ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தஞ்சாவூரைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு பாரதி விருது வழங்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி விருது வழங்கி பாராட்டுரை நிகழ்த்துகிறாா். கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டை முன்னிட்டு இந்நிகழ்வில் கண்ணதாசனின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளது. கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா, கண்ணதாசன் படத்தை திறந்துவைத்துப் பேசுகிறாா்.

‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற தலைப்பில் தமிழருவி மணியன் விழாச் சிறப்புரையாற்றுகிறாா். தேசிய நல விழிப்புணா்வு இயக்கத்தின் தலைவா் எஸ்கேஎம். மயிலானந்தன் நிகழ்வுக்குத் தலைமை வகிக்கிறாா். முன்னதாக மாலை 4 மணிக்கு ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதி இறுதிப் பேருரை நிகழ்த்திய நூலகத்திலிருந்து தொடங்கும் இளைஞா்களின் பாரதி ஜோதி அணிவகுப்பை அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் கே. தங்கவேலு தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளாா்.

இந்த விழாவுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாரதி அன்பா்கள், இலக்கியவாணா்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் திரளாக வருகை புரிந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.