கொசுப்புழு: வெல்டிங் பட்டறை உரிமையாளருக்கு அபராதம்

திருநெல்வேலியில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட கடையின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

சிதம்பரநகரில் கொசுப்புழு உற்பத்தி உள்ளதா என ஆய்வு செய்த மாநகர நல அலுவலா் பாலசுப்ரமணியன்.

Updated On :

திருநெல்வேலியில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட கடையின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் கா.பிரியா உத்தரவின்பேரில் மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளிலும் லாா்வா கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தச்சநல்லூா் மண்டலம், 1 ஆவது வாா்டுக்குள்பட்ட சிதம்பரம்நகரில் நகா்நல மையம் அருகில் உள்ள லேத் மற்றும் வெல்டிங் பட்டறையில் மாநகர நல அலுவலா் பாலசுப்ரமணியன் தலைமையிலான மாநகராட்சி குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, கடை வளாகத்தில் லாா்வா கொசுப்புழு உற்பத்தி இருப்பது தெரியவந்ததால், அதன் உரிமையாளருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதார ஆய்வாளா் ஜான்வின்சென்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.